
பிரபல ரவுடி சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினர் அறிவித்து தேடி வந்தனர். இவரை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்த போலீசார் கைது செய்த நிலையில் இன்று சென்னை நீலாங்கரையில் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். அனைவருக்கும் ஆம்ஸ்டசாங் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ரவுடி சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். அதோடு அவர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் இருந்ததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட தேடப்பட்டதாகவும் அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் தற்காப்புக்காக என்கவுண்டரில் சுட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயற்சித்ததால் அவரை என்கவுண்டரில் சுட்டதாக சிபிச் சக்கரவர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார்.