
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 55 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் 20 ரூபாய் உயர்ந்து 6980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 98 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளை 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது