
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்பாத் பகுதியில் ஜெயின் சமூக மக்களின் திருவிழா நடைபெற்றது. அப்போது லட்டு வாங்க சென்ற போது திடீரென கண்காணிப்பு கோபுரம் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்த நிலையில் 40 பேருக்கும் மேல் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் இவர்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படும் நிலையில் உயிரிழப்புகள் இடம் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.