
நாட்டில் வழக்கமாக மாதத்தில் முதல் நாளில் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 38 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
கடந்த மாதம் 7.50 வரை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 38 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1855 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும் சமையல் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாக ஆகும்.