தமிழக வெற்றி கழக தலைவரான விஜய் அரசியலில் முழு ஈடுபாடுடன் உழைத்து வருகிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. நடிகர் விஜய் மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழக வெற்றிக்கழக முக்கிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை பனையூரில் விஜயின் காரை தமிழக வெற்றி கழகத்தினர் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக ஆர்.கே மணியை நியமிக்க தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து விஜயின் காரை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து திருவொற்றியூர் பகுதியை தனி மாவட்டமாக பிரித்து அதற்கு செயலாளரை நியமிக்கவும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது விஜய் தொண்டர்களிடமிருந்து மனுவை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.