டெல்லியில் இருந்து திப்ருகர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அது உடனடியாக கவுஹாத்தி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ரமேஷ் டெலி, இரண்டு பாஜக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 150 பயணிகள் இருந்தனர். 15 நிமிடங்கள் மட்டுமே பறந்த விமானத்தின் விமானி சாதூர்யமாக செயல்பட்டதால் அமைச்சர் உட்பட அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர்.