
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் இன்று 22 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. அதாவது ஐகோர்ட் உத்தரவின் படி இன்று கோவில் திறக்கப்பட்ட நிலையில் மேல் பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலை சுற்றி 300க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு இருதரப்பு மோதலால் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கோவிலை திறக்க வேண்டும் என்று சீமான் உள்ளிட்டடோர் வலியுறுத்தி வந்ததனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றம் கோவிலை திறக்க உத்தரவிட்டதால் அதன்படி கோவில் திறக்கப்பட்டுள்ளது.