
புதுச்சேரியில் பல கோடி மதிப்பில் நடந்த கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை புதுச்சேரி போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதாவது கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி 10 பேரிடம் 2 கோடியே 40 லட்ச ரூபாய் ரொக்கம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையை தலைமை இடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட நிலையில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட போது நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் விழாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை தமன்னாவுக்கு 25 லட்சம் ரூபாயும் நடிகை காஜல் அகர்வாலுக்கு 18 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பிரபல நடிகைகள் காஜல் மற்றும் தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பி புதுச்சேரி இணையவழி போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.