தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே முடிவுகள் வெளியாகும். அனுமதி கிடைக்க தாமதமானால், தள்ளிப்போக வாய்ப்புள்ளது.