
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி அரசு பள்ளிகளில் 91.02 % பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீத பேரும், தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதம் பேரும், இருபாலர் பள்ளிகளில் 94.7 சதவீதம் பேரும், பெண்கள் பள்ளிகளில் 96.39 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளன.