
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
என எச்சரித்துள்ளது.