
சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தற்போதைய கணக்குப்படி தொகுதி வரையறை செய்யப்பட்டால் ஏழு மாநிலங்கள் 44 இடங்களை இழக்க நேரிடும். குறிப்பாக தென் மாநிலங்களின் இடங்கள் 30%-ல் இருந்து 20 சதவீதமாக குறையும் அபாயம் உள்ளது. மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.