
அதிமுகவினுடைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரக்கூடிய 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:35 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்திலே இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக அழைப்பிதழ் அளிக்கப்படும் என்றும் பத்திரிகையாளர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் மிக மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினுடைய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் நடத்தக்கூடிய ஒரு முதல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது.
ஒரு கட்சியினுடைய பிரதான கூட்டம் என்பது பொதுக்குழு கூட்டம் தான். ஏனென்றால் பொதுக்குழு கூட்டத்தில் தான் மிக மிக முக்கியமான முடிவுகள் எல்லாம் எடுக்கப்படும். கட்சியில் மாற்றங்கள் இருந்தாலும், பொறுப்புகள் மாற்றம் அல்லது கட்சியில் அறிவிக்கப்படக்கூடிய தீர்மானங்கள் போன்றவை எல்லாம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படும். இது அந்த கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளும் இந்த பொது குழுவில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்ப்பார்கள் என்பது முக்கியமான விஷயமாக இருக்கின்றது.
எனவே வரக்கூடிய 26 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் அரசியல் அரங்கிலே முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகின்றது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறக்கூடிய ஒரு முதல் பொதுக்கூட்டம் இது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த பொதுக்குழுவானது நடைபெற்றது.
அதன் பிறகு பல்வேறு வழக்குகள், சட்ட போராட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. அதன் பிறகு தான் இரட்டை தலைமை – ஒற்றை தலைமை சட்ட போராட்டம் அதன் தொடர்ச்சியாக தான் நீதிமன்ற வழக்குக்கின் மூலமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்று, அதிமுகவினுடைய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அந்த அடிப்படையிலே அதிமுகவின் பொது செயலாளர் இந்த பொதுக்குழுவை கூட்டுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.