
சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 561.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால், வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு சிறப்பு வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 561 கோடி ரூபாய் செலவிலே ‘Integrated Urban Flood Management activities for Chennai Basin Project’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 500 கோடி ரூபாய் அளிக்கும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த எட்டு வருடங்களிலே மூன்றாவது முறையாக சென்னையில் மிகவும் அதிக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குறிப்பாக வடிகால் வசதிகள் அமைப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
அடையாறு, கூவம் ஆகிய முக்கிய நதிகள் சென்னை வழியாக கடலுக்குள் பாய்கின்றன. சென்னை மாநகரத்தின் ஜனத்தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழாமல் இருக்க…. தண்ணீர் விரைவாக வடிந்து நதிகளுக்கு சென்று, அங்கிருந்து கடலுக்கு செல்வதிறக்க இந்த திட்டம் இருக்கும். ஆகவே இந்த சமயத்திலே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுகிறது.
வருங்காலத்திலே தற்போது உள்ள இதுபோல வெள்ள பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு இந்த 561 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 561 கோடி மத்திய அரசு அளிக்கும். மாநில அரசு இந்த திட்டத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களை அமல்படுத்தும். ஆகவே இதற்காகத்தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரும் காலங்களில் சென்னையில் வெள்ள பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கான முக்கிய திட்டமாக கருதப்படுகிறது.
Chennai is facing major floods, the third such occurring in the last eight years. We are witnessing more instances of metropolitan cities receiving excessive rainfall, leading to sudden flooding.
Guided by a pro-active approach, PM @narendramodi Ji has approved the first urban…
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) December 7, 2023