
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் நடந்த மார்ச் 5-ம் தேதி அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் மற்றும் பாஜகவை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றது. இந்நிலையில் வருகிற 22 ஆம் தேதி அன்று சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்களுக்கு, தமிழக முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கேரளா தெலுங்கானா, பஞ்சாப், ஆகிய 3 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கர்நாடகா துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் பங்கேற்கிறார். கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஓடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து காங்கிரஸ், சிபிஎம், திருணாமூல், பி ஆர் எஸ், ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், IUML, ஓவைசியின் AIMIM உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.