திமுகவுடன் 4ஆம் தேதி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தையை நடத்த  இருக்கிறது.

வரக்கூடிய பிப்ரவரி 3ஆம் தேதி முத்தரசன் தலைமையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு குழு பேச போகிறார்கள். நான்காம் தேதி மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தமிழகத்தில் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.  சிபிஐக்கு பொறுத்தவரை திருப்பூர் மற்றும் நாகை தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல சிபிஎம்மை பொருத்தவரை கோவை மற்றும் மதுரை இரண்டு தொகுதிகள் கொடுக்கப்பட்டன.  அவர்களுக்கு தலா இரண்டு இடங்களுக்கு கொடுப்பதற்கு திமுக தயாராகி இருக்கிறார்கள். குறிப்பாக திருப்பூர்,  கோவைக்கு பதிலா வேற தொகுதியை மாற்றி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கொங்கு கட்சிக்கும் இந்த முறை நாமக்கல்லுக்கு பகுதியாக ஈரோடு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட் டுள்ளது. நாமக்கல்லில் திமுக போட்டியிட இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.