தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கியதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் நடிகையும், அதிமுக கட்சியின் பிரமுகருமான காயத்ரி ரகுராம் தவெக தலைவர் விஜயை எதிர்த்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.