சென்னை புழல் மத்திய சிறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிறை வளாகம், கழிப்பறைகள் சுத்தமாக உள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை சிக்கன் முட்டையுடன் சுகாதாரமான உணவு விநியோகப்படுகிறது. வாரத்தில் மூன்று முறை வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் வசதி அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்படுகிறது.

ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதிகள் மாதம் 7500 சம்பளத்துடன் பெட்ரோல் பங்கில் பணிபுரிகின்றனர். இலவச சட்ட ஆலோசனை வெளிநாட்டு கைதிகளுக்கு தொலைபேசி வசதி தேவை சிறை மருத்துவமனைக்கு உள்கட்டமைப்பு தேவை என்று சிறை ஆய்வுக்குப் பின்னர் நீதிபதிகள் ரிவ்யூ கொடுத்தனர்.