செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பலமுறை சொல்லியாச்சு. அதே  கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க. எப்ப கேட்டாலும் சரி… எந்த நேரத்தில் கேட்டாலும் சரி… தூக்கத்தில் எழும்பி கேட்டாலும் சரி…. பிஜேபியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த பெட்டியை கழட்டி விட்டாச்சு. அதனால இனிமே அந்த பெட்டியை எஞ்சினுடைய சேர்க்கக் கூடிய எண்ணம் கிடையாது

அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்துகிறார். பிஜேபி அது அவர்களுடைய விஷயம். அதுக்குள்ள போக விரும்பல. பிஜேபியை முன்னிலைப்படுத்தவில்லை. அங்கு இருக்கிறவங்களுக்கும் தெரியும். இன்னைக்கு அவரைப் பொறுத்தவரை நடக்காத ஒரு விஷயத்தை சொல்லி திசை திருப்பலாம் என்று சொன்னால்,  கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதேபோல தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,  யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  கண்டிப்பாக அவருடைய பணி  எப்படின்னு தெரியும். நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை  என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். நாங்க அண்ணாம லை போன்று கூல கும்பிடு போடும் ஆள் இல்லை… அண்ணே அண்ணே என்று கூல கும்பிடு போட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை எப்படியாவது ஏமாத்தி இங்கு கால ஊன்ற நினைச்சு,  எதுவும் வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்தால் அது பிரயோஜனமும் வரப்போவது கிடையாது என தெரிவித்தார்.