பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லை எனில் தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எச்சரித்துள்ளார். பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக வீடியோ ஆதாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி விசாரணையை 23ம் தேதிக்கு ஒருத்தி வைத்தார்.