
இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள போரை நிறுத்தும் வகையில் கடந்த 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதை இந்த ஒப்பந்தமாகும்.
ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நதிநீரை நிறுத்துவது போருக்கு நிகரானது என பாகிஸ்தான் கூறிய நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.