
கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தற்போது இதனை தனது வீட்டில் கூறியதை அடுத்து இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமிகளை பாலியல் தாக்குதல் செய்த புகாரில் மத போதகர் ஜான் ஜெபராஜ்(37) மீது கோவை மாநகர போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.