மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 8-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

அதோடு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை பார்ப்பதற்காகவே பல்வேறு ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் மதுரைக்கு வருவார்கள். மேலும் இதற்காக மதுரை மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.