
தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறி அதனை ரத்து செய்தது. பின்னர் அந்த பத்து மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியதோடு மசோதாக்கள் மீது இன்னும் 90 நாட்களுக்குள் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியது.
இதுகுறித்து துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியதாவது, குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நடைமுறையை அனுமதிக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. சட்டப்பிரிவு 145 விளக்குவது தான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. சட்ட பிரிவு 142 நீதிமன்றத்தின் அணு ஆயுத ஏவுகணையாக மாறிவிட்டது. நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.