
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக இருக்கக்கூடிய அப்பாவு கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது தமிழகத்தில் மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது தொடர்பாகவும், திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்கள் மிரட்டி பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது பதிலளித்த அவர் ஒன்றிய அரசானது அங்கு இருக்கக்கூடிய புலனாய்வு, அமலாக்கத்துறை , வருமானவரித்துறை ஆகிய மூன்று துறைகளிலும் இடைத்தரையர்கள் பல பேர் செயல்படுகிறார்கள். அவ்வாறு இருக்கக்கூடிய இடைத்தரகர்கள் பலர் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை மிரட்டி, அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து பணம் பறிக்கும் கும்பலாக செயல்படுகிறார்கள்.
எனக்கும் இதுபோன்று ஒரு இடைதரகர் இருவர், என் நண்பர்கள் மூலமாக…. எனக்கு தெரிந்த நபர்கள் மூலமாக என்னிடம் பேசினார். நான் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை. இருப்பினும் அவர்கள் என்னை சில நாட்கள் தலைமறைவாக இருக்க சொன்னார்கள். இதுமட்டும் இல்லாமல் சில காலத்திற்கு என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்றிவிட வேண்டும் என சொன்னதாக பல்வேறு தகவல்களை சொல்லி இருக்கிறார்.++