சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாவது, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். இதை நாம் தக்க வைத்து அதிகரிக்க வேண்டும். சென்னை நகரில் 40 கோடி ரூபாய் செலவில் 500 மாணவர்கள் தங்கி பயலும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களுக்கு நாளை மறுநாள் பாராட்டு விழா நடக்க உள்ளது. அதில் நானும் கலந்து கொள்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.