
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை தொடர்பான அரசாணையை அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் காவல்துறையினரின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் வார விடுப்பு வழங்கி உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.