திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், உதயநிதி ஸ்டாலின் எப்படி நீட் விலக்கு வாங்கி தருவாரு ?  திமுக எப்படி நீட் விலக்கு வாங்கித் தந்திருமா ? அப்படின்னா….  அதை மட்டும் சொல்லி நிறைவு செய்கிறேன்…  மற்றவர்கள் பேசணும்….  திராவிட முன்னேற்றக் கழகத்துடைய… திராவிட இயக்கத்துடைய வரலாறு தெரியாமல் கேட்கிறார்கள்….  திமுக எப்படி வாங்கித் தந்துவிடும் என்று….  இந்த தெருவுக்குள்ள நடக்கவே கூடாதுன்னு சொன்னான்….

ஏண்டா நடக்கக்கூடாது என்று ஒருத்தர் குச்சியை தூக்கிக்கொண்டு டோப்பு,  டோப்புன்னு தலை மேலையே போட்டாரு. அவர் பெயர் தந்தை பெரியார். மிகப் பெரிய போராட்டத்தின் மூலமாகத் தான் நமக்கு சுயமரியாதை… இன உணர்வை உட்டி… இன்றைக்கு எல்லாருக்கும் ஒரே சமம் என்று வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் தந்தை பெரியார். இட ஒதுக்கீடு….பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு என்று சாத்தியமே இல்லை என்று சொன்ன போது,

அதனை முதன் முதலில் சாதித்து காட்டியது தமிழ்நாடு. அதற்கு வித்திட்டவர் தந்தை பெரியார்.  எல்லாம் மாநிலத்திலும் இந்தியை ஏத்துகிட்டாங்க…  தமிழ்நாடு மட்டும் இந்தி ஏற்றுக்கொள்ளாமல் எப்படி இருக்க முடியும் ? என்று கேட்ட போது,   தமிழ்நாட்டில் முடியும் என்று மிகப்பெரிய உயிர் தியாகங்களை செய்து…. இந்தி எதிர்ப்பில் உறுதி காட்டி…. இந்தி இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டியவர்கள் பேரறிஞர் அண்ணாவும்,  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நடத்திய மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள். அப்போ இந்த போராட்டங்களின் மூலமாக இதனை சாதித்து காட்டினார்கள்.

அதற்கு பிறகு…  ஏன் இன்னும் சொல்லப்போனால்…  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இறந்த பிறகும் கூட போராடினார்ன்னு சொல்லுவார்கள்…  அவர் என்ன கோடநாடு  எஸ்டேட்ல பங்கா கேட்டாரா  ? இல்லல. பேரறிஞர் அண்ணாவின் காலடியில் 6 அடி இடம் கேட்டார். தமிழ்நாட்டை எத்தனை ஆண்டு காலமாக ஆட்சி செய்த ஒரு பெரும் தலைவர். அவருக்கு இடம் தர மறுத்தார்கள். இறந்து போன பிறகும் அவர் போராட்டம் நடத்தினார்.

அந்தப் போராட்டத்திற்காக…. அவருக்காக வாதாடி அந்த இடத்தை பெற்று கொடுத்தவர் திரு. ஸ்டாலின் அவர்கள். அப்போ போராட்டத்தின் மூலமாக எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தி காட்டிய ஒரு வரலாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அந்த வரிசையில் பெரியாரின் கொள்கை வாரிசு,  கலைஞரின் பேரன்,  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகனாக மட்டுமல்ல…  அனிதாவின் அண்ணனாக… உதியநிதி ஸ்டாலின் நீட் விலக்கை  நிச்சயம் பெற்று தருவார்.

தங்கை மதிவதினி பேசும் போது சொன்னங்க…  எப்படி சாத்தியம் ? அப்படினா…  ஒரே ஒரு செங்கல்… அந்த ஒரு செங்கலை  இன்னும் பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறார். அந்த செங்கலை வைத்து வரை இருக்கக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினுடைய அதிகார மமதைக்கு சமாதி கட்டப்படும்.  அதன் மீது நின்று நீட் விலக்கு வெற்றி விழாவை நாம் கொண்டாடுவோம் என தெரிவித்தார்.