பிரபல ஹிந்தி நடிகை அர்ச்சனா பூரான் சிங் தனது படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் ராஜ்குமார் ராவ் என்பவர் உடன் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது திடீரென வழுக்கி கீழே விழுந்து என்னுடைய கை உடைந்தது மற்றும் எனது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அங்கிருந்தவர்கள் என்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு எனக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்னுடைய முகம் மற்றும் வலது கை, உதடுகளில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு ராஜ்குமாரிடம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டதாகவும், மேலும் நஷ்டத்தை சந்திக்க விரும்பாததால் விரைவில் மீண்டும் இணைவதாகவும் அவர் வீடியோவில் கூறினார். இவர் தமிழில் ரஜினியின் ‘பாண்டியன்’, பிரபுவின் ‘நாளைய செய்தி’, திரிஷா ‘எனக்கு 20 உனக்கு 18’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.