
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருமை சகோதரர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் சென்னை வானூர்தி நிலையத்திற்கு கொடுத்த பேட்டி இருக்கிறது. வளையொலியில நீங்க பார்க்கலாம். நீட் தேர்வு அவசியமென்று… அவருக்கு எதுக்கு சீட் கொடுத்தீங்க காரைக்குடியில் நிற்க ? நீங்க நீட்டை எதிர்க்கிறீங்க, நான் ஏற்கிறேன். ஏன் நீங்க கொடுத்தீங்க ? இந்த நீட் தேர்வு வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றவர் யாரு ? அம்மா நளினி சிதம்பரம்.. அந்த கட்சியை எதுக்கு உள்ள வச்சிருக்கீங்க.
கொடநாடு கொலை வழக்கை என் தம்பி பேசுறதில்லையே அண்ணாமலை. கொட நாட்டுல கொலை நடந்தது உண்மையா ? இல்லையா ? அது மட்டும் சொல்லுங்க. நீங்க எல்லாம் சொல்லுங்க.. பத்திரிக்கையாளர்கள்… முதலமைச்சர் எடுக்கணும் இல்ல….
அவர் கையில தானே காவல்துறை இருக்கு. எதிர்க்கட்சியா இருக்கும் போது நீங்க தேர்தல் பரப்புரைல ரெண்டே மாசத்துல கொட நாட்டு கொலை வழக்க விசாரிச்சு, நீதியை வெளிய கொண்டு வருவேன் சொன்னீங்களா ? இல்லையா ? இப்ப ரெண்டரை வருஷம் ஆயிடுச்சு, ஏன் செய்யல ? ஒன்னு நீங்க எடப்பாடி கிட்ட பணம் வாங்கி இருக்கணும்… ஏதாவது ஒன்னு நடந்திருக்கணும் என தெரிவித்தார்.