
நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் எதிரொலியாக பங்குச்சந்தைகள் உச்சத்தை எட்டி உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,182 புள்ளிகள் உயர்ந்து 60,732 புள்ளிகளாகவும். தேசிய பங்குச்சந்தை நிப்டி 293 புள்ளிகள் உயர்ந்து 17,955 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முக்கிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.