
நாடாளுமன்றத்தில் நேற்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த வகையில் பாதுகாப்பு துறைக்கு ரூ.4.54 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்புப்படைக்கு (SPG)-க்கும் ரூ.506.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.