
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை கடந்த 10 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது. மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடியாக உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.