
நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மாத சம்பளம் ரூ.1 லட்சம் வரை பெறுபவர்கள் இனி வருமான வரி கட்டத் தேவையில்லை.
புதிய வருமான வரி திட்டம்:
ரூ. 4 லட்சம்- இல்லை
ரூ.4-8 லட்சம்- 5%
ரூ.8-12 லட்சம்-10%
ரூ.12-16 லட்சம்-15%
ரூ.16-20 லட்சம்-20%
ரூ.20-24 லட்சம்-25%
ரூ 24 லட்சத்திற்கும் மேல்-30%
பழைய வருமான வரி திட்டம்:
ரூ. 2.5 லட்சம்- இல்லை
ரூ.2.5-5 லட்சம்- 5%
ரூ. 5-10 லட்சம்- 20%
ரூ.10 லட்சத்திற்கு மேல்- 30%