
2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பிற மாநிலங்களிலும் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பட்ஜெட் வருகிற மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை வருகிற மார்ச் 10ஆம் தேதி கூட உள்ளது.
அதே மாதம் 12ஆம் தேதி 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, சபாநாயகர் செல்வம் வெளியீட்டுள்ளார். இதனை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இவரது தலைமையிலான இந்த அரசு பதவியேற்ற காலங்களை தவிர இரண்டாவது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.