தெலுங்கானா மாநிலம் தும்மிடி குண்டா என்னும் பகுதியில் பிரபல நடிகர் நாகார்ஜுனா பிரம்மாண்ட கட்டடம் கட்டியுள்ளார். அந்த கட்டிடம் அப்பகுதியில் உள்ள ஏரி நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. அங்கு 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த கட்டிடங்களில் வைத்து 2015 ஆம் ஆண்டு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடிகர்கள் வருண் தேஜ் லாவண்யா தம்பதியினரின் திருமண வரவேற்பு விழா நடத்தப்பட்டுள்ளது. மேலும் படங்களுக்கான ஷூட்டிங்கும் இந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இது குறித்து 2014 ஆம் ஆண்டு 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் சொத்து பாதுகாப்பு நிறுவனம் ஹைதராபாத் பேரிடர் மீட்பு குழுவுடன் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளுவதற்காக பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்றது. அப்போது அங்கு 35 % கட்டுமானங்களை அதிகாரிகள் இடித்து தள்ளினார்கள். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.