வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி, கீழ்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 55 பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். அந்த பேருந்தை திவாகர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்யாறு வந்தவாசி சாலையில் திரும்பூண்டி அருகே சென்றபோது திவாகரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 37 பேர் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.