கர்நாடக மாநிலத்தில் 4 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுகின்றன. இந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பேருந்துகளின் கட்டணம் கடந்த 2015 ஆம் ஆண்டு கடைசியாக உயர்த்தப்பட்டது. அதன் பின் பேருந்து கட்டண வசதியில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து பல நிலைகளில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை உயர்ந்துள்ளது இருந்தும் கர்நாடக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. இதுகுறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

ஆனால் ஆளும் கட்சி மக்களுக்கு எதிராக செயல்படக்கூடாது என்பதால் இந்த கோரிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடக அரசு காங்கிரஸ் கட்சி பெண்களை இலவசமாக பயணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தியது. இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தாலும் இதனால் கர்நாடக அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 16 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பளம் உயர்வு, பேருந்து கட்டண உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட இருந்தனர்.

இது குறித்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புத்தாண்டு பிறந்த வாரத்திலேயே ஜனவரி மாதம் 5 ஆம் தேதி காலை முதல் பேருந்து கட்டணத்தை 15 சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் 2 கிலோமீட்டருக்கு ரூபாய் 2 உயர்கிறது. அதாவது ரூபாய் 10 வசூலிக்கப்பட்ட இடத்தில் ரூபாய் 12 ஆக உயர்த்தப்படுகிறது. புத்தாண்டு தொடங்கிய முதலில் பேருந்து கட்டணம் உயர்ந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.