மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார். முன்பாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர், இதையடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆணையர் தினேஷ் குமார், பயணிகள் வசதிக்காக கழிவறைகளை இலவசமாக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்ததாக கூறியுள்ளார். மேலும், இனி இங்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது, இதை மீறி யாரேனும் கட்டணம் வசூலித்தால்,  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த முடிவை பயணிகள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.