கேட்பரி டெய்ரி மில்க் இந்தியா வெளியிட்ட புதிய விளம்பரம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில் ஒரு குழு பெண்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டிருக்க, புதிதாக குடியேறிய சென்னையைச் சேர்ந்த ஒரு பெண், அவர்களுடன் கலந்துரையாட முயற்சி செய்கிறார். ஆனால், ஹிந்தி அறியாத காரணத்தால், அவர் முதலில் சிறிது அசௌகரியமாக உணர்கிறார். இதைக் கவனித்த குழுவில் உள்ள ஒருபெண், அவருக்கு வசதியாக, இங்கிலீஷில் பேச தொடங்குகிறார். இதனால், அந்த பெண் நம்பிக்கை பெற அவர் உரையாடல்களில் இணைந்து விடுகிறார்.

இந்த விளம்பரம் ஒரு சமூக பிரச்சினையை மெல்லிய வகையில், எவ்வித போதனையாக இல்லாமல் எடுத்துக் கூறியுள்ளதற்காக, பாராட்டுகளைப் பெற்றுள்ளது. “மொழி தடையாக இருக்க தேவையில்லை, எளிய கருணை மட்டுமே போதும்” என்பதே விளம்பரத்தின் கருத்து. மேலும், “கடலை மிட்டாய் போல இனிமையான விளம்பரம். மார்க்கெட்டிங் குழுவுக்கு சம்பளம் உயர்த்தவேண்டும்” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த விளம்பரத்தை பலரும் தமிழக-மத்திய அரசுகளுக்கிடையே தொடரும் மொழி விவாதத்துடன் தொடர்புபடுத்தி கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, திமுக அரசு மத்திய அரசை ஹிந்தித் திணிப்பு முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த விளம்பரம் எளிய வகையில் ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. “சிறிய மாற்றங்களே பெரிய உறவுகளை உருவாக்கும்” என்ற கருத்தை, கேட்பரி டெய்ரி மில்க் விளம்பரம் அழகாக வெளிப்படுத்தியிருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by NEWS FLASH (@india_news_flash)