
உத்தரப்பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இளம்பெண்ணுக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்ட நிலையில், அதில் ஊசியை தலைக்குள் வைத்து தைத்துள்ளார்.
அந்த பெண், தையல் போடப்பட்ட பின்னர், தலையில் மிகுந்த வலியால் அவதிப்பட்டு, அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள், தலையில் இருந்து தையலை பிரித்த போது, அதில் ஊசி இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த தவறான சிகிச்சை முறையை அறிந்த பொது மக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சம்பந்தப்பட்ட மருத்துவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.