சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் ராணுவ முகாமில் ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விலங்கு ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பைது ராஜு  என்ற  16ஆவது மதிராஸ் ரெஜிமெண்ட் பகுதியை சேர்ந்த லான்ஸ் ஹவில்தார் என்பவர் தெரு நாய் ஒன்றை இரும்பு கம்பியால் கொடூரமான முறையில் தாக்குகிறார்.

இதில் அந்த நாய் பலத்த காயமடைந்து துடித்து துடித்து உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தடுக்க வந்த பொதுமக்கள் மீதும் அவர் இரும்பு கம்பியால் தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற கொடூர செயலை செய்யும் நபருக்கு இந்திய ராணுவத்தில் இருக்க தகுதி இல்லை. அவர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விலங்கு ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ முகாமிலிருந்து  எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதிலும் வெளிவரவில்லை.