
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஷேக் தவ்பிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு கோழி முட்டைகளை அடைகாத்து வந்துள்ளது. அந்த அடைகாக்கப்பட்ட ஒரு முட்டையிலிருந்து நேற்று 2 கோழிக்குஞ்சுகள் வந்துள்ளது.
அந்த கோழிக்குஞ்சுகள் இரண்டும் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிசய சம்பவத்தை காண மக்கள் அவர்களது வீட்டிற்கு வந்து பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து கால்நடைத்துறை டாக்டர் ஒருவர் கூறியதாவது, மரபணு குறைபாடு காரணமாக ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள் வந்துள்ளது என்றார்.