தமிழகத்தில் உள்ள அனைத்து  சட்டக் கல்லூரிகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று மதுரை ஹைகோர்ட் கிளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமா.? என அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதாவது தமிழகத்தில் உள்ள 7 சட்டக்கல்லூரிகளில் முதல்வர்கள் கிடையாது. பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளது. அதுமட்டுமின்றி பல சட்ட கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. எனவே சட்ட கல்லூரிகள் அனைத்தையும் மூடிவிடலாமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த வழக்கில் முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வேறொரு நாளுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.