தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்த இவர் இறுதியில் அரசியல்வாதி ஆனார். மக்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் இவர் 2023 டிசம்பர் 28 அன்று இயற்கை எய்தினார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு 71 வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடக்கவிருக்கிறது. இது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இது விஜயகாந்த் ன் 71 வது பிறந்தநாள் என்பதால் 71 நபர்களுக்கு  71 நிமிடத்தில்  71 டாட்டூ கலைஞர்கள் மூலம் விஜயகாந்தின் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேர் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த டாட்டூ போடும் நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் மூலம் தொடங்கப்பட உள்ளது .