
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் தொழிலதிபரான விஷ்ணு ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது நண்பர் திலீபன் ஆயில் மில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக விஷ்ணுராமும், திலீபனும் காரில் சென்னைக்கு சென்றனர். அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்ற சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புகளை உடைத்துக் கொண்டு மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விஷ்ணு ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்த படுகாயமடைந்த திலீபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.