கோவையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் பக்கபாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம்(57) என்பவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.