நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவல் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் நெல்லை டக்கரம்மால்புரத்தில் வசித்து வரும் தன்சிலால் மற்றும் அவருடைய மனைவி மார்கரெட் மேரி, அவருடைய மகன் ஜோபர்,மனைவி அமுதா, குழந்தைகள் ஜோகன், ஜோதினா எனபதும், எதிரே வந்த காரில் பயணித்தவர் கண்ணன் குளத்தை சேர்ந்த மெல்கிஸ் என்பதும் தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.