
தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆதாயம் தரும் பதவியில் இருக்கக்கூடிய ஆளுநர் எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநராக நீடிக்கிறார் என்று விளக்கம் கேட்க வேண்டும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணை நடந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
அப்பொழுது மனுதாரர் தரப்பில், ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என்று அரசியல் சாசன சட்டம் பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், ஆளுநர் தனிப்பட்ட முறையில் அவர் பதவி வகிக்கின்றார். எனவே இதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும், நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாம் என்றும் வாதிடப்பட்டது. அதேசமயம் ஆதாயம் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்டவிதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா ? என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்று முடிவெடுப்பதாக கூறி, வழக்கின் மீதான உத்தரவை தள்ளி வைத்திருந்தார்கள். அந்த வழக்கில் தான் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதன்படி ஆளுநர் ரவி பதவியில் நீடிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடியாது என்ற ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள்.
பதவியில் இருக்க கூடிய ஒரு குடியரசுத் தலைவரோ, ஆளுநரரோ நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவர்களுக்கு அல்ல என்று உத்தரவை பிறப்பித்து இருக்கின்றார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சுட்டிக்காட்டி, இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்து பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் உத்தரவிட்டிருக்கிறது.