2024 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

* கீர்த்தி சுரேஷும், கொச்சியை சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகள் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது டிசம்பர் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், நடிகை திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

* நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசும், மாடல் அழகியான தாரணி காளிங்கராயரும் பல ஆண்டுகள் காதலித்து வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 8ம் தேதி கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

* நாக சைதன்யாவும், நடிகை சோபித்தா துலிபாலாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் டிசம்பர் 4ம் தேதி நடைபெற்றது. இவர்களது திருமண த்தில் தெலுங்கு பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தி தெரிவித்தனர்.

* நடிகை ரம்யா பாண்டியனும், யோகா மாஸ்டரான லவல் தவான் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் நவம்பர் 8ம் தேதி ரிஷிகேஷில் நடைபெற்றது.

* நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

* நடிகை மேகா ஆகாசும், நடிகர் சாய் விஷ்ணுவும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.

* நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் தனது காதலியான இந்துவை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருத்தணியில் உள்ள முருகன் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

* நடிகர் அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாவதியும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் கடந்த ஜூன் 10ஆம் தேதி நடைபெற்றது.

* சரத்குமாரின் செல்ல மகளான வரலட்சுமியும், தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்றது.